வாட்ஸ் அப்பில் வருகிறது அதிரடி அப்டேட்… மெட்டா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இனி ஃபேஸ்புக்கில் உள்ளது போலவேஎ கவர் இமேஜ் வைத்துக்கொள்ளும் வசதி வாட்ஸ் அப்பிலும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், மெசெஜ் தகவல்களை அனுப்புவதற்கு உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அடிக்கடி அப்டேட் செய்யப்பட்ட வெர்சனில் வாட்ஸ் அப் இயங்குகிறது. அதேநேரம் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப வசதிகளை வாட்ஸ் அப் மாற்றி வருகிறது. தற்போது வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, ஃபேஸ்புக்கைப் போலவே வாட்ஸ் அப்பிலும் கவர் இமேஜ் எனப்படும் முகப்பு படம் வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும், அதன் பின்னர் தனிப்பயனாளர்களுக்கும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் வாட்ஸ் அப்பில் ஒரு கேமரா ஐகான் பொருத்தப்பட உள்ளது. அதனை க்ளிக் செய்து புதிதாக புகைப்படம் எடுத்தோ அல்லது ஏற்கவே உள்ள போட்டோவில் ஒன்றை தேர்வு செய்தோ முகப்பு படமாக வைத்துக்கொள்ளலாம்.

அதேபோல் கம்யூனிட்டி என்ற வசதியும் வாட்ஸ் அப்பில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் குரூப்பில் உள்ள அட்மின்கள் தனது குரூப் உடன் பிற குரூப்களையும் இணைத்துக்கொள்ள முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.