உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேற்று இரவு திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்கள் முடங்கியதாகவும் இதனை அடுத்து அதனை சரிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது
குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துவதால் பயனர்கள் பலர் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் இருந்தனர்
இதனை அடுத்து ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தொழில் நுட்ப வல்லுநர்கள் கோளாறை சரி செய்ததை அடுத்து தற்போது மீண்டும் வாட்ஸப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இயங்கி வருகிறது என்பதும் இதனை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.