ஹேக்கர்களால் முடக்கப்பட்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் என்ன ஆச்சு?

877f4e66029f077e9d1aa558df8b3f10

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் திடீரென்று முடக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த பக்கத்தில் 10 லட்சம் பாலோயர்கள் இருந்ததாகவும் ஏராளமான வீடியோக்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் முடக்கப்பட்டதை அடுத்து அவர் இது குறித்து புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் விரைவில் மீட்கப்படும் என்று அவரது தரப்பினர் கூறி வந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஹேக்கர்களால் முடக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

மேலும் அவர் பதிவு செய்துள்ள அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் தற்போது அது வழக்கம் போல இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தரப்பினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.