சூட்டிங்கில் திடீர் மயக்கம்! பவர் ஸ்டாருக்கு என்னதான் ஆச்சு? சோகத்தில் ரசிகர்கள்;

தனது முக பாவனையால், காமெடி திறத்தால் இன்று மக்களிடையே பவர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பவர்ஸ்டார்

இந்த நிலையில் இவர் திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

இவர் நடிகர் மட்டுமில்லாமல் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும்கூட திரைப்படங்களில் நடிப்பதற்கான அடைமொழியாக பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

லத்திகா என்ற படம் மூலமாக 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் அறிமுகமானார். இவர் தமிழில் நடிகர் சந்தானம் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார். கேப்மாரி திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் பிக்கப் ட்ராப் என்னும் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

சீனிவாசனின் தற்போது நிலை குறித்து அதிர்ச்சியான புகைப்படம் வெளியானது. இருப்பினும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment