“வாட்ஸ்-அப்” சேவை முற்றிலுமாக முடக்கம்!! பயனாளர்கள் தவிப்பு!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன்களின் அதிகரிப்புக்கு ஏற்ப வாட்ஸ்அப் சேவைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி குறுந்தகவல்களை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் பெரிதும் உதவுகிறது.

இதற்கிடையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதனால் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே முடக்கத்திற்கான காரணம் தெரியாமல் பயனாளர்கள் குழம்பத்தில் உள்ளனர்.

மேலும், தொழில்நுட்ப காரணமாக பல பகுதிகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment