போக்குவரத்து விழிப்புணர்வு, சைபர் கிரைம், போக்குவரத்து விதிமுறைகள் மீறுவது தொடர்பாக காவல்துறை சார்பில் திரைப்பட துறை உதவியுடன் 3 குறும்படங்கள் தயாரித்தனர்.

இந்த குறும்படங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இதில் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் கலந்து கொண்டு இந்த படங்களின் சிடியை வெளியிட நடிகர் மனோபாலா இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிடியை பெற்றுக்கொண்டார்.
மேலும் வாட்ஸாப்பில் தவறான தகவல்களை பரப்புவதை பற்றியும் பல சைபர் க்ரைம் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது.
மனோபாலா இந்த குறும்படங்களில் இவை பற்றி தெளிவாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.