தமிழ் சினிமாவின் திறந்த ஒரு மாறுபட்ட கதை களத்தை போன்ற திரைப்படங்கள் வெளியாகி கொண்டே வருகிறது. அதுவும் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை கேற்றவாறு தங்களை உருமாற்றிக் கொண்டு நடிக்கின்றனர்.
அவர்களில் சிறந்த உதாரணமாக காணப்படுவர் நடிகர் சத்யராஜ். ஏனென்றால் இவர் கதாநாயகன், வில்லன், அப்பா, சிறப்பு தோற்றம் என பல கதாபாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவராக காணப்படுகிறார்.
இந்த நிலையில் இவரும் நடிகை ஊர்வசியும் வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது பக்கத்தில் வீட்டில் விசேஷம் திரைப்படம் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும் இது தரமான என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் படத்தின் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார் இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.