Connect with us

என்ன சொல்றீங்க கொரோனா குறைந்ததா? ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வா?

blind restrictions to control the corona

செய்திகள்

என்ன சொல்றீங்க கொரோனா குறைந்ததா? ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வா?

என்ன சொல்றீங்க கொரோனா குறைந்ததா? ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வா?

இந்தியாவில் எதிர்பாரத விதமாக கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு இரண்டரை லட்சத்தை தாண்டி பதிவாகிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநில அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தளர்த்த உள்ளதாக கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளார். கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கவும் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தனது முடிவை ஆளுநருக்கு அனுப்பினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்படுகின்ற போதும் டெல்லியில் இத்தகைய அறிவிப்பு மற்ற மாநிலங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top