
Tamil Nadu
என்னப்பா சொல்றீங்க இன்னிக்கும் அதே ரேட்டு தானா..!! அதிருப்தியில் வாகன ஓட்டிகள்;
மார்ச் மாத இறுதியிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை திடீரென்று உயர்ந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு சுமார் நூற்றி முப்பத்தி ஆறு நாட்கள் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அதற்குப் பின்பு தினமும் பெட்ரோல் டீசல் விலை சராசரியாக 76 காசுகள் என்ற விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வந்தது. இவ்வாறுள்ள நிலையில் கடந்த 35 நாட்களாக சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை மாற்றம் இன்றைய தினமும் நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பெட்ரோல் சென்னையில் ரூபாய் 110.85க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.
மேலும் டீசலும் அதேபோல்தான் விலை மாற்றம் இன்றி காணப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.94க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்ன தான் விலை மாற்றமின்றி காணப்பட்டாலும் பெட்ரோல் விலை சற்று உயர்வாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பெட்ரோல் விலை எப்போது குறையும் என்ற ஏக்கத்தோடும் ஏங்குகின்றனர்.
