எங்கு பார்த்தாலும் கட்டாயம் அரசியல்வாதி இருப்பார் என்பது போலத்தான் அனைத்து துறைகளும் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு ஒலிம்பிக் விளையாட்டு சங்க நிர்வாகியாக அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு தடை உத்தரவையும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இது குறித்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மேல்முறையீடு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
அரசு விளையாட்டு சங்க நிர்வாகிகளாக நியமிக்கக் கூடாது என்று உத்தரவில் தவறு இல்லை என்று உத்தரவிட்டது ஹைகோர்ட். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்.
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர். விளையாட்டு வீரர்களின் வசதிகளைப் பறிக்கவே அரசியல்வாதிகள் விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மாநிலத்திற்காகவும் தேசத்திற்காகவும் விளையாடக்கூடிய வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று நீதிபதிகள் கூறினர்.