சசிகலா-ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! என்னவாக இருக்கும்? எதிர்பார்ப்பில் பல கட்சியினர்;

இது கட்சி அதிமுக கட்சிக்கு மிகப்பெரிய குழப்பமாக காணப்படுபவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. குறிப்பாக அதிமுக பொன்விழா அன்று திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்ற பெயர் பொறிக்கப்பட்டது.

சசிகலா

இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் சசிகலா பற்றி செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.

ரஜினிகாந்த்

இந்த நிலையில் சசிகலா திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து உள்ளார். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தாதா சாகேப் பால்கே விருது பெற்று இருந்தார்.

அதன் பின்னர் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து விசாரிக்கவே சசிகலா நேரில் சென்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மரியாதை நிமித்தமாகவே சசிகலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னை போயஸ் கார்டன் ரஜினிகாந்தின் இல்லத்தில் நேரில் சென்று சசிகலா சூப்பர் ஸ்டாரின் உடல்நலத்தை கேட்டிருந்தார். அதோடு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு வாழ்த்தும் தெரிவித்தார் சசிகலா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment