விக்ரம் சென்ற விமானத்தில் என்ன பிரச்சனை? திடீரென திரும்பியதால் பரபரப்பு!

b661ac193924027d0ccc4eccb1524bf7

பிரபல நடிகர் விக்ரம் சென்ற விமானம் திடீரென பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அந்த விமானம் திருப்பப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விக்ரம் நடித்துவரும் சியான் 60 என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு டார்ஜிலிக் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து சியான் 60 படக்குழுவினர் விமானம் மூலம் டார்ஜிலிங் சென்றனர் 

அவர்கள் சென்ற விமானம் திடீரென சென்னை திரும்புவதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சென்னை திரும்புவதாகவும் பைலட்டுகள் அறிவித்தனர். இதனை அடுத்து விக்ரம் சென்ற விமானம் சென்னை திரும்பியதும் அதன் பின்னர் மறுநாள் சியான் 60 படக்குழுவினர் டார்ஜிலிங் சென்றனர் என்பதும் தற்போது டார்ஜிலிங் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.