குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? விசாரணை அறிக்கை தாக்கல்!

கடந்த ஆண்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ஏனென்றால் கடந்த ஆண்டு அதிக பேரிழப்புகள் நிகழ்ந்து கொண்டது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து அதில் பயணித்த ராணுவ அதிகாரிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி

குறிப்பாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் அந்த விபத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன் கேந்திர சிங் தலைமையிலான முப்படையின் குழு விசாரணை அறிக்கையை தந்தது. நஞ்சப்பசத்திரத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள், குறித்த விவரங்கள், விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் மற்றும் இனிமேல் நடக்காமலிருக்க எடுக்க வேண்டியது பற்றியது தொடர்பான தகவலும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment