கடுமையான திருஷ்டிக்கு என்ன செய்ய வேண்டும்

404651ce30545c46bf2e2ba10fb0c88d

இந்த உலகில் கொடுமையான விசயம் திருஷ்டி நன்றாக சென்று கொண்டிருக்கும் ஒருவர் வாழ்வில் மீதோ இல்லை அவர் மீதோ ஆஹா நல்லா இருக்கிறாரே நமக்கு அது சரியா வரலையே அவர் மட்டும் நல்லா இருக்கிறாரே என நினைத்துவிட்டால் திருஷ்டி அவர் மீது பட்டு விடும், நம்முடைய தீய அதிர்வலைகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிப்போட முயற்சி செய்யும். அவர் என்ன துறையில் ஜெயித்து வருகிறாரோ அந்த துறையில் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியை சந்தித்து வருவார். சிலர் குறிப்பிட்ட நபர் மீது கண் மட்டும் போடாமல் கடுமையான வசவு வார்த்தைகளை கொண்டு திட்டவும் செய்வர் இதனால் சம்பந்தப்பட்டவர் மிகவும் பாதிக்கப்படுவார்.

இது போல விசயங்களுக்காக வெள்ளி செவ்வாய்களில் மிளகாய் எல்லாம் வைத்து சுற்றிப்போடுவார்கள். இது போக திருஷ்டி கழிய சொல்லப்படும் விசயம் என்னவென்றால், கடல் நீரில் தினமும் குளித்தால் திருஷ்டி இருக்காதாம். எல்லோராலும் தினமும் கடலில் குளித்தல் என்பது இயலாத காரியம் அதனால் கடல் நீரின் மூலம் கிடைத்த கல் உப்பு, மஞ்சள் சிறிதளவு இவற்றை தினமும் நீரில் கலந்து குளிக்க வேண்டுமாம். இப்படி செய்து வந்தால் நம்மை சுற்றியுள்ள தீய அதிர்வலைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.