மழை நேர விடுமுறை காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும்?-மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்;

தற்போது நம் தமிழ்நாட்டில் மழை காலம் நிகழ்கிறது. இதனால் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.

ககன்தீப்சிங் பேடி

இந்த விடுமுறை நாட்களில் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதன்படி மழைக்காலத்தில் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தேவையின்றி வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார். தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு மழை நேரத்தில் மின்சார கம்பங்கள், வயர்களை மக்கள் தொடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மழை காரணமாக மின்சாரம் பல பகுதிகளில் நிறுத்தப்படலாம் அதனால் பலரும் செல் போன்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு மழை நீரை வாளியில் பிடித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment