
தமிழகம்
இது என்ன புதுசா இருக்கு.!! திமுகவுக்கு இயற்கை ஆதரவா? சாட்சி மழை தானா?
எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் மே மாதம் முழுவதும் தொடர்ந்து இதமான வானிலையே நிலவுகிறது. மேலும் தினம்தோறும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் மழை பெய்து கொண்டு தான் வருகிறது.
இந்த நிலையில் இந்த மழை பற்றி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இயற்கையே திமுக ஆட்சிக்கு பெரும் ஆதரவை கொடுக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் மழை கொட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதன் காரணமாக முன்கூட்டியே இன்றையதினம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்த 75 ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே மாதம் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
திமுகவுக்கு மழை ஆதரவு அளிக்கிறது என்று கூறியுள்ளது அதிமுக இடையே பெரும் சலசலப்பை உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
