என்ன கருமம்டா இது? உங்களுக்கெல்லாம் டேஸ்ட்டே கிடையாதா?

உணவு என்பது வெறும் பசியை போக்குவதற்காக என்பதை தாண்டி தற்போது அது எதோ ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்போதொல்லாம் யாரேனும் ஹோட்டலுக்கு சென்று உணவு ஆர்டர் செய்தால் அதை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் ஸ்டோரி, வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தான் சாப்பிடவே தொடங்குகிறார்கள்.

மேலும் நான் இத்தனை வகையான உணவை சாப்பிட்டுள்ளேன் என மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி அதில் என்ன தான் உள்ளதோ தெரியவில்லை. இதுகூட பரவாயில்லை இன்னும் சிலர் புதிது புதிதாக உணவுகளை தயார் செய்து உண்டு வருகிறார்கள்.

அந்த உணவையெல்லாம் கேட்டாலே சாப்பிட தோணாது. அந்த வகையில் தற்போது புதிதாக மிராண்டா பானிபூரி வைரலாகி வருகிறது. பொதுவாக பானி பூரி என்றாலே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பானி பூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் கூட ஃபயர் பானி பூரி என்ற உணவு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மிராண்டா பானி பூரி பிரபலமாகி வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் மிராண்டாவில் பானி பூரி தயாரிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள கோல்கப்பா அஃபேர்ஸில் ஒரு நபர் மிராண்டா பானி பூரி சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ள இந்த வீடியோ தற்போது வரை விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. பலரும் இந்த வீடியோவை வெறுத்துள்ளனர். மோசமாக விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். எப்படித்தான் இதுபோன்ற உணவையெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment