
தமிழகம்
எதிர்க்கட்சி அதிமுக தான்..!! பாஜக செய்வது மாயை பிரச்சாரம்!!
தற்போது நம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக காணப்படுவது அதிமுக தான். ஏனென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தன.
இருப்பினும் தேர்தலில் தோல்வியடைந்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக மாறியுள்ளது. இந்த நிலையில் பாஜக எதிர்க்கட்சி போல் பிரச்சாரம் செய்வது தெரிகிறது. இதனை குற்றச்சாட்டாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதன்படி தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சியான பாஜக மாயை பிரச்சாரம் செய்து வருகிறது என்று கூறியுள்ளார். அதிமுக ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து விலகாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனம் என பாஜக நூயர் சர்மாவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இத்தகைய பேச்சு அதிமுக பாஜக இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கும் என்று தெரிகிறது.
