Connect with us

பாட புத்தகத்தை எடைக்குப் போட்டு பள்ளி மாணவிகள் செய்த காரியம்… போலீஸ் காட்டிய அதிரடி ஆக்‌ஷன்!

weighing

கல்வி

பாட புத்தகத்தை எடைக்குப் போட்டு பள்ளி மாணவிகள் செய்த காரியம்… போலீஸ் காட்டிய அதிரடி ஆக்‌ஷன்!

12 வயதுள்ள ஏழாம் வகுப்பு மாணவிகள் (சிறுமி) இருவர் தனது புத்தகங்களை எடை போட்டு ரூ50 பெற்று மாயம், தாயார் கொடுத்த புகார்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு (A- பிரிவில்) பயின்ற இரண்டு 12 வயதுள்ள சிறுமிகள் பள்ளி சீருடையில் நேற்று மாயமாகி உள்ளனர்,

இது குறித்து புத்திர கவுண்டன் பாளையம் தேவேந்திரநகர் பகுதியில் உள்ள சிறுமியின் தாயார் பிரியா (33) ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஏத்தாப்பூர் போலீஸார் தீவிர விசாரணையில் அந்த இரண்டு சிறுமிகளும் நேற்று பேற்றோர் வீட்டிலிருந்து காலை 8.30 மணிக்கு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து காலை 8.30 மணியளவில் சிறுமிகளின் புத்தகங்களை பழய புத்தகங்கள் என்று கூறி எடைக்கு போட்டு ரூ 50 பெற்று சென்றுள்ளனர் என்பது தெரிய வந்த நிலையில் தேடி வந்தனர்,

இன்று காலை கோவையில் இருப்பது தெரிய வந்து ஏத்தாப்பூர் போலீஸார் சிறுமிகளை மீட்க விரைந்தனர், மீட்ட பின்பு காரணம் என்னவென்று தொய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in கல்வி

To Top