கடந்த ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் முடக்கப்பட்டது? ஜெயலலிதாவின் நினைவிடம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

நேற்றைய தினம் கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான விவாதம் நிகழ்ந்தது. திமுக தலைவரும், தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஆட்சியின்போது திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டது என்று கூறினார்.

இதனால்தான் இந்த முறை அதிமுக ஆட்சியை இழந்தது என்றும் சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில் இன்று அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் பற்றி பட்டியலிட்டு கூறிவருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அதிமுகவை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் பேரவையை மாற்றி மருத்துவமனையை அமைத்தது யார்? என்று முதல்வர் கேள்வி கேட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் கலைஞர் பெயரிலான திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டதாக சில திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை பராமரிக்கும் என உறுதி அளிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment