
Entertainment
நடிகை ஷிவானிக்கு திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ…!!
சின்னத்திரையில் தனது carrier ஸ்டார்ட் செய்து தற்போது வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் பகல் நிலவு என்ற நெடுந்தொடரில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
அதன் பின்பு மற்றும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் தனது காலை நன்றாகப் பதிய வைத்தார். அதற்குப் பின்பு அவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளித்திரைக்கு நுழையும் வாய்ப்பை பெற்றார்.
அதிலும் பிக் பாஸ் சீசன் 4 இல் இவரது காதல் பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாக வெளிவந்தது. இருப்பினும் கூட அதற்குப் பின்பு அவர் நடிப்பதில் தனது ஆர்வத்தை காட்டிக் கொண்டு வருகிறார்.
அதுவும் குறிப்பாக பிக்பாஸ் நுழைவதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிக அளவு சம்பாதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஷிவானி தனது கையில் மாலையோடு ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. ஷிவானிக்கு திருமணமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அதற்கு ஷிவானி ரசிகர்கள் பதிலைக் கூறி கொண்டுவருகிறார்கள், அதில் உண்மை இல்லை என்றும் அவர் அதே உடையோடு மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போல தெரிவதால் நிச்சயமாக திருமணமாக இருக்காது என்றும் பதில் கூறிக் கொண்டு வருகிறார்கள்.
