Connect with us

தமிழகத்திலும் லாட்டரி சீட்டா? அதுவும் பெண்ணா? 4 பேர் கைது-4 மொபைல் போன்கள் பறிமுதல்!

lottery 1 1

தமிழகம்

தமிழகத்திலும் லாட்டரி சீட்டா? அதுவும் பெண்ணா? 4 பேர் கைது-4 மொபைல் போன்கள் பறிமுதல்!

தமிழகத்திலும் லாட்டரி சீட்டா? அதுவும் பெண்ணா? 4 பேர் கைது-4 மொபைல் போன்கள் பறிமுதல்!

தமிழகத்தில் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட மட்டுமின்றி லாட்டரி சீட்டு களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த லாட்டரி சீட்டு என்பது யாரேனும் ஒருவருக்கு பரிசு தொகை கிடைக்கும் என்பதும், பணம் கொடுத்தவர்கள் பலரும் ஏமாற்றம் அடைவார்கள் என்று கருதி லாட்டரி சீட்டு விற்பனை தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தற்போது வரையும் லாட்டரி சீட்டுக்கு அனுமதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ள நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த செயலில் ஈடுபட்ட 4 பேர் தற்போது கைதாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விராலிமலை சீத்தாபட்டியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைதாகியுள்ளனர்.

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி, மணிமுத்து, பழனிச்சாமி, அஞ்சலிதேவி ஆகிய 4 பேர் கைதாகி உள்ளனர். லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தும் 4 மொபைல் போன்கள், ஒரு லேப்டாப், ஒரு பைக் உள்ளிட்டவர்களை விராலிமலை  போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top