
Entertainment
என்ன உதயநிதியோட கடைசி படம் இதுவா?.. வருத்தத்தில் ரசிகர்கள்…
நடிகர் உதயநிதி சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி படம் பற்றிய சில தகவல்களை பேசியுள்ளார்.
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியானது இப்படத்தில் உதயநிதியுடன் ரவிச்சந்திரன் இளவரசு மயில்சாமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சில ஆண்டுகளாக ஹிந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து தயாரித்து வரும் போனிகபூர் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஆர்ட்டிகல்ஸ் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக் ஆகும்.
இத்திரைப்படமானது ஆதிக்க சாதியினரின் தாழ்த்த சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கூண்டுக்குள் அடைபட்டு இருக்கும் பெரியார் அம்பேத்கர் சிலைகள் யாத்திரை போன்ற தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் படத்தின் திரைக்கதையில் உள்ளது. மேலும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பரியேறும் பெருமாள் கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் ஆழமான சமூக கருத்துக்களை பற்றி பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் படத்தை பற்றி பல தகவல்கள் கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர் அனேகமாக மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பேனா என்று தெரியவில்லை ஒருவேளை இதுவே என் கடைசி படமாக கூட இருக்கலாம் இன்னும் முடிவு செய்யவில்லை பார்ப்போம் என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் மாரி செல்வராஜ் உடன் பயங்கரமா இருக்குமாறு படத்தை முடிக்க பிளான் செய்துள்ளோம் முடித்துவிட முடியுமா என்பது இப்போது சந்தேகமாக உள்ளது எனவும் மேலும் படத்தில் மூன்று பெரிய ஆர்டிஸ்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கமலின் விக்ரம் படம் இவ்வளவு மணிநேரம் ஓடக்கூடியதா?.. ரன் டைம் விவரம்..
