என்னது மூன்றாவது டோஸ் தடுப்பூசியா? வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டதா ஒமைக்ரான்?

தென்னாபிரிக்காவில் தோன்றி இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி கொண்டு வருகிறது ஒமைக்ரான். இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தடுப்பூசி

இந்த ஒமைக்ரான் பரவல் அதிகம் வீரியம் உள்ளதாக காணப்படும் என்றும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் மக்கள் யாரும் இதற்கு பயப்பட வேண்டாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் 2தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசியை பெரும்பாலான மக்கள் செலுத்துவதில் அசட்டை செய்கின்றனர்.

அதனை நீக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் புதுப்புது விதமான முறைகளைக் கையாண்டு வருகிறது.இவ்வாறுள்ள நிலையில் இந்தியாவில் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க மக்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment