Connect with us

‘கழுகு 2’ படத்தில் பிந்துமாதவிக்கு பேய் கேரக்டரா?

Entertainment

‘கழுகு 2’ படத்தில் பிந்துமாதவிக்கு பேய் கேரக்டரா?

0eddb114a80f4900e313e5a627ce0eb8

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. காதல் மற்றும் காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா ஹீரோவாகவும், பிந்து மாதவி ஹீரோயினியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் கிருஷ்ணாவின் நண்பராக காளி வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

8096bce148aaa39f715c9ddd61197e7bஇந்த நிலையில் கழுகு படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்துமாதவி இறந்துவிடுவார்கள். ஆனால் கழுகு 2 படத்தில் மீண்டும் அதே ஜோடி நடிப்பதால் முதல் பாகத்தில் இறந்த வாரிசுகளாக நடிக்கின்றார்களா? அல்லது பேயாக நடிக்கின்றார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பிந்துமாதவிக்கு பேய் கேரக்டர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேய்ப்படம் மற்ற படங்கள் போல் காமெடி கலக்காமல் முழுக்க முழுக்க த்ரில்லுடன் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top