நீட் தேர்வோட நிலவரம் என்ன? ஆளுநரிடம் கேட்க சென்ற அமைச்சர்கள்..!!

இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவையில் ஆளுநர் நீட் விலக்கு மசோதா பற்றி ஏதேனும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீட் தேர்வு பற்றி சட்டப்பேரவையில் எதுவும் பேசாதது அனைத்து கட்சிகளிடமும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் தமிழக அரசு அனுப்பியிருந்த நீட் விலக்கு மசோதா தீர்மானத்தை நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நீட் விலக்கு  மசோதா பற்றி நிலவரம் அறிந்து கொள்ள அமைச்சருடன் திடீர் சந்திப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர்  ரவியுடன் தமிழக அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் தங்கம் தென்னரசு திடீரென்று சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். நீட்தேர்வு விலக்கு மசோதா தொடர்பான நிலைப்பாட்டை கேட்டறிய ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment