என்னது தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் சிறிய மாற்றமா?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். வலிமை திரைப்படத்திற்காக தல அஜித்தின் ரசிகர்கள் ஓராண்டுக்கு மேலாக காத்திருந்தனர். அதன் பலனாக அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசையாக கொடுக்கப்பட்டன.

valimaiaa

குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவியது. தல ஃபேன்ஸ்ன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களிலும் தல அஜித்தின் பைக் ஸ்டண்ட் வீடியோ காணப்பட்டது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீசில் சிறிய மாற்றம் நிகழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 12 அல்லது 13 ம் தேதி படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி வலிமை திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியாகும் திரைப்படங்களின் தேதி அறிவித்துள்ளது. அதில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வலிமை திரைப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment