நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சொன்ன ரகசிய திட்டம் என்னவானது?- சீமான்;

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் தற்போது நுழைவுத்தேர்வு ஆனது நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் மிகுந்த சோகத்தை கொடுக்கும் நுழைவுத் தேர்வாக காணப்படுகிறது நீட்தேர்வு.

சீமான்

இந்த நீட்தேர்வு மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகும். இந்த நிலையில் நீட் தேர்வினால் நம் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

காலம் கடத்தாமல் தமிழக அரசு நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியத் திட்டம் இருப்பதாக திமுக சொன்னது  என்னவானது? என்றும் சீமான் கேள்வி கேட்டுள்ளார். ஏ.கே.ராஜன் ஆணைய அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment