Astrology
சகட யோகத்துக்கு என்ன பரிகாரம்
சகட யோகம் என்று சொல்வதை விட சகட தோஷம் என்று சொல்வதே சிறந்ததாய் இருக்கும். இந்த தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் மிகுந்த துன்பத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக்கொண்டே இருப்பர். படிப்பு, வேலை, திருமணம் என எதுவும் சரியாக அமையாது. சகடம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “சக்கரம்”. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம் சக்கரம். சக்கரம் கீழ்ப்பகுதி மேலும்,மேல்பகுதி கீழும் எப்போதும் போல் சுழல்வதைப் போன்றே, சிலரது வாழ்க்கையும் எந்த விதமான மாறுதல்களும் இன்றி சாதாரண நிலையில் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.
இவர்கள் ஊர் ஊராக அலைந்து நாய் படாத பாடு என்று சொல்வார்களே அது போல வேலைக்காக அலையும் நிலை ஏற்படும் அப்படி அலைந்தாலும் தொழிலில் நிம்மதி இருக்காது. சரியான பணவருவாய் இருக்காது.
ஜாதகத்தில் ஒருவருக்கு குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகடை யோகம்” அல்லது “தோஷம்” இருக்கிறதென்று அர்த்தம். இவ்விருகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இந்த 6,8,12 ஆம் இடங்கலில் அக்கிரகங்களின் உச்ச ராசி அல்லது வீட்டிலிருந்தால் சகடை தோஷம் இல்லை எனக் கொள்ளலாம்.
இப்படி இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் திருப்தியற்ற வாழ்க்கையை வாழ நேரிடும், இவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று சந்திர மற்றும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கோவில் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தானங்களிலும், சேவைகளிலும் ஈடுபட்டு வரலாம்.
இப்படி தொடர்ந்து செய்தாலும் காலப்போக்கில்தான் இப்பிரச்சினைகள் முற்றிலும் சரியாக வரும். இருந்தாலும் மன உறுதியோடு இந்த வழிபாடுகளை செய்து வந்தால் பிரச்சினைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கும். பெருமளவு பிரச்சினைகள் தடைபடும்.
