நீட் மசோதா திருப்பி அனுப்பியதன் காரணம் என்ன? விளக்கமளித்தார் ஆளுநர்;
கடந்த வாரம் தமிழகத்தில் அதிர்ச்சியான நிகழ்வு நடந்தது. அதன்படி கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து விவாதிக்க இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக காலையிலேயே தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நீட் மசோதா திருப்பி அனுப்பியது ஏன் என்ற காரணத்தை விளக்கியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி. அதன்படி நீட் விலக்கு தொடர்பாக அரசு அனுப்பிய மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் ஆளுநர் ரவி கூறினார். நீட் இலக்கு இல்லாத ஒரு தேர்வு என்ற பொத்தாம் பொதுவாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
