சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன?

5b6b8f5def96156742769c85c3d7c4bb-1

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது என்பதையும் பார்த்தோம் 

இந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட தங்கம் விலை நேற்றைய விலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4511.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூபாய் 4510.00 என விற்பனையாகி வருகிறது 

அதே போல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 36088.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே குறைந்து ரூபாய் 36080.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் 24 காரட் சுத்தத் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4874.00 எனவும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 38992.00 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் சற்று இறங்கி உள்ளது. நேற்றைய விலை 20 காசுகள் குறைந்து இன்று வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூபாய் 72.00 எனவும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 72000.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment