நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்த நிலையில் இன்று முதல் மர்மமுடிச்சாகவே இருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் சமீபத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொலை, கொள்ளை வழக்கில் இளங்கோவனை விசாரணை செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் சமயத்தில் சேலம் புறநகர் மற்றும் மாவட்ட செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி வெற்றி பெற்றார். ஆனால் தனது பதவியை நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு விட்டுக்கொடுத்தார்.
இதனால் அதிமுக கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை வளையத்தில் உள்ள இளங்கோவனை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வழங்கியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது சேலம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி கூறியுள்ளார்.
மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இளங்கோவன் நிரபராதி என நீருபிக்கப்படும் வரை அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க கூடாது என்றும் இதனை கட்சி மறு ஆய்வு நடத்தாமல் இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறினார்.