Connect with us

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Tamil Nadu

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

4b40633522e11d27a187b0a36ce04322

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில தினங்களாக மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 

குறிப்பாக சென்னை மீண்டும் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்து விட்டது என்பதும் கோவையை பின்னுக்கு தள்ளி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மொத்தம் எவ்வளவு என்பதையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு என்பதையும் தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது

அதன்படி தமிழகம் முழுவதும் 471 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஈரோடு நீலகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் பகுதிகளின் எண்ணிக்கை இதோ

தமிழகத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிலவரப்படி 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம். தமிழ்நாட்டில் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன, சென்னையில் 85, ஈரோடு 46, நீலகிரி 43 , தஞ்சாவூர் – 41 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன; தமிழ்நாடு அரசு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top