Connect with us

தேர்தல் தோல்வி..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இன்று மாலை செயற்குழு கூட்டம்!!

காங்கிரஸ்

செய்திகள்

தேர்தல் தோல்வி..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இன்று மாலை செயற்குழு கூட்டம்!!

தேர்தல் தோல்வி..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இன்று மாலை செயற்குழு கூட்டம்!!

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக அமைய வில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியுடன் இழந்தது.

அதுவும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு மாநிலத்திலும் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தங்கள் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சி செயற்குழுவில் பதவி விலக முடிவு பற்றிய அறிவிப்பினை ராகுல்காந்தி வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

தற்போதைய அரசியல் நிலவரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு திட்டங்கள் வகுப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top