உலக அளவில் கொரோனா என்ற கொடிய நோய் பரவி மக்களை ஆட்டிப்படைத்தது வந்தது ,அதில் இருந்து தப்பித்து சில காலம் தாம் ஆகிறது அதற்குள் மீண்டும் தொற்று ஏற்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
முன்னதாக கொரோனா பரவல் தொடக்கிய நேரத்தில் கோவாக்சின் கோவைசில்டு என தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு உயிர் காப்பாத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது மூக்கு வழியாக bbv 154 என கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை ஐதராபாத்தை சேர்ந்த பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்திருந்தது. இந்த மருந்திற்கு அனுமதி கோரி இந்நிறுவனம் மத்திய அரசிற்கு விண்ணப்பித்திருந்தது.
தற்போழுது உருமாற்றம் அடைந்த ஓமைகிரான் பரவல் இந்தியாவிற்கும் நுழைந்துள்ள நிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பூஸ்டராக பயன்படுத்த திடடமிட்டுள்ள இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை இணையதளம் செயலியுடன் இதனை இணைக்க நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரொம்ப கவனம்.. இவங்க எல்லாம் மூக்கு வழி கொரோனா தடுப்பு செலுத்தக்கூடாது!
மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோ டெட்கின் மருந்து முதலில் தனியார் மருத்துவமனையின் மூலமாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளதாக அரசு வட்டாரே தகவல்கள் தெரிவிக்கின்றனர்.