தற்போது உலகத்திற்கே மிகவும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டு காணப்பட்டுள்ள ஒரு வைரஸ் கிருமி கொரோனா. இந்த நிலையில் சமீபகாலமாக ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா ஒன்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் அதிக தீவிரத்தோடு கொரோனா பரவி வருகிறது. அதற்கு ஒமைக்கிரான் கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒமைக்கிரான் கொரோனா என பெயர் வைத்ததற்கு காரணம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு உருமாறும் கொரோனாக்கு கிரேக்க அகர வரிசையில் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என அகரவரிசையில் பெயரிட்டு வருகிறது உலக சுகாதார மையம்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு அகர வரிசைப்படி பார்த்தால் நு என்று பெயர் வைக்க வேண்டும். ஆனால் இதனை ஆங்கிலத்தில் வார்த்தையாக வாசிக்கும்போது நியூ என உச்சரிக்கப்படும் என்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு அடுத்ததாக உள்ள ஷி என்ற வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன அதிபரின் பெயர் ஷி என தொடங்குவதால் அந்தப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்துதான் கொரோனா வருகிறது என்று பேச்சுவார்த்தை இருக்கும் நிலையில் இவ்வாறு உலக சுகாதார மையம் பெயரை மாற்றியது.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவுக்கு தரவரிசையில் 15ஆவது எழுத்தான ஒ என்ற எழுத்தில் தொடங்கும் ஒமைக்கிரான் என்ற பெயரில் வைத்துள்ளது.