Connect with us

மாஜி அமைச்சர்களின் நண்பர்களை மடக்கிய அதிகாரிகள்… அதிரடி ரெய்டின் பின்னணி என்ன?

Velumani Vijaybhasker 130922 Wik

தமிழகம்

மாஜி அமைச்சர்களின் நண்பர்களை மடக்கிய அதிகாரிகள்… அதிரடி ரெய்டின் பின்னணி என்ன?

முன்னாள் அதிமுக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், அவர்களது நண்பர்களது வீடு மற்றும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்பு வாங்கிய எஸ்.பி. வேலுமணி:

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 2016 முதல் 2018 ம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பொழுது தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்து இருந்தார். எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று கோவையில் 9 இடங்கள் உட்பட தமிழக முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம் உட்பட ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சான்றிதழால் சிக்கிய விஜயபாஸ்கர்:

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பொறுப்பு வகித்த போது, திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய மருத்துவமனை துவங்க தகுதியானது என சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

நண்பர்கள் வீடுகள் சுற்றி வளைப்பு:

மதுரையில் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான மருத்துவர் பாலாஜி என்பவருக்கு சொந்தமாக புதூர் – ஜவகர்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் சேலம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றியவர். தற்பொழுது தேனி அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றி வருகிறார். 3 ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடர்புடைய சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான திருவள்ளுர் அடுத்த படூர் பகுதியில் உள்ள ஏசிஇ டெக் கனரக வாகனம் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top