ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி

கிருபானந்த வாரியாரின் முதன்மைச் சீடரான தேச மங்கையர்க்கரசி அவர் விட்டுச் சென்ற ஆன்மிக பணிகளைத் தவறாமல் கடைபிடித்து செய்து வருகிறார். சொற்பொழிவாற்றுவது, ஆன்மிக யாத்திரை செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். கொரோனா கால இடைவெளிக்குப்பிறகு சிவராத்திரி விழாவை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக முக்கியமான ஆலயங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கு கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று  மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பிரம்மாண்டமான முறையில் செய்து அசத்தினார்.

இதுதவிர ஆன்மிக சொற்பொழிவுகளை தற்போது ஆத்ம ஞான மையம் என்ற தனது யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். அறநிலையத்துறை ஆலோசனையின் உயர்மட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் ஆலயங்களில் நடைபெறக்கூடிய கலைசார்ந்த குழுக்களை எவ்வாறு நடத்தணும்கற குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் ஆன்மிகத்தைப் பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வீட்டுக்கு முன்னாடி வரும்போது விநாயகப்பெருமானின் பார்வை இருக்க வேண்டும். வர்றவங்க பார்க்குற மாதிரி விநாயகரை வைத்தால் எந்தவிதமான பிரச்சனைகளும் வராமல் இருக்கும். கலைநயமிக்க பொருள்கள் வீட்டுக்குள் வைக்கும்போது நமக்கே சந்தோஷமா இருக்கும்.

நல்ல பாசிடிவ் வைப்ரேஷன் இருக்கும். எப்பவுமே நாம வெளியில பல பிரச்சனைகளுக்கு மத்தியில வேலை செஞ்சு வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே நமக்கு இந்தப் பிள்ளையாரைப் பார்த்த உடனே ஒரு சாந்தமா இருக்கும்.

Vinayagar 1
Vinayagar

திருச்செந்தூர் முருகன் எல்லாருக்குமே பிடிக்கும். சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ராஜ அலங்காரத்துல கையில் ஒரு மலரோடு இருப்பார். தன்னோட தகப்பனை பூஜிக்கிற மாதிரி இங்கு மட்டும் இருக்கும். அதனால பூஜா மூர்த்தின்னு சொல்வாங்க.

வெட்டிவேர் வீட்டில் வைத்தால் நல்ல ஒரு அதிர்வலைகளை உண்டாக்கும். வீடுகளில் ஜன்னல்களின் ஓரத்தில் வைத்தால் அதன் மீது பட்ட காற்றை நாம் சுவாசிப்பதால் நல்ல மாற்றம் உண்டாகும்.

Vetti ver
Vetti ver

அந்தக்காலத்தில் ஜன்னல்ஓரத்தில் இதை அழகாகப் பின்னி தண்ணீர் தெளித்து வைப்பர். கோடையில் குளுகுளுன்னு இருக்கும். இதைக் காய்ச்சிய தண்ணீரையும் குடிக்கலாம். இது உடம்புக்கு மிகவும் நல்லது.

சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும்.

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்குத் துவங்கி காலை 6.05 மணி வரை தொய்வின்றி நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

அப்போது இரவு 1.30 மணிக்கு தியானம் ஆரம்பித்தது. ரங்கம் முழுமையாக இருந்தது. பல இடங்களில் இருந்து பிரசாதம் வந்த வண்ணம் இருந்தது. பெங்களூர், தஞ்சாவூர், கும்பகோணம் என பல இடங்களில் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

Nei Deepam
Nei Deepam

நெய் தீபம் ரொம்ப விசேஷமானது. 5 நிமிஷம் எரிந்தால் கூட இது ரொம்ப விசேஷம். பஞ்சு திரி போட்டு மண் விளக்கில் கூட விளக்கேற்றலாம். ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது. மக்களோட வாழ்க்கையை மிகச் சரியான முறையில் எடுத்துட்டுப் போறது தான். இப்படி ஏற்றினாலே போதும். சுவாமி சந்தோஷமா ஏத்துக்குவார்.

பூஜை அறை என்பது இறைவனை மட்டுமே ஆராதிக்கக்கூடிய இடம். சிலர் தன்னோட தாய் தந்தையர் தான் எனக்கு முக்கியம் என்பவர்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். அது அவர்களது மனம் சார்ந்த விஷயம்.

பிரம்மச்சரியத்தை மட்டுமே கடைபிடிக்கக்கூடிய தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபட முடியாது. ருத்திராட்சத்தை யார் வேண்டுமானாலும் போடலாம். அசைவ உணவை எடுத்துக் கொள்ளும்போது இது இருக்கக்கூடாது. மற்றபடி யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். குழந்தைகள், கணவன், மனைவி கூட போட்டுக் கொள்ளலாம்.

ஆத்ம ஞான மையத்தின் சார்பாக யாத்திரைகளையும் நடத்துறோம். ஒவ்வொரு தலங்களுக்கும் அழைத்துச் சென்று அந்தக் கோவிலின் சிறப்பம்சங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.