நம் இந்தியாவில் தொடர்ந்து ஆதார் எண் அனைத்து விதமான அடையாள அட்டையுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் திமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக காணப்படுகிறது.
இதனால் திமுகவிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு விதமான கேள்விகளை முன் வைத்துள்ளார். அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் போலி வாக்காளர் அட்டையை முற்றிலுமாக நீக்க முடியும் என்று கூறினார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு திமுக கடும் தெரிவிக்கிறது என்றும் அண்ணாமலை கூறினார். ஆதார் மூலம் போலி வாக்காளர்களை அடையாளம் காண்பதில் திமுகவுக்கு என்ன சிக்கல் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆதார் அட்டையை ஆதாரமாகக் கொண்டால் கள்ள ஓட்டுகள் போடுவது தடுக்கப்படும் என்றும் கூறினார். கள்ள ஓட்டு, போலி வாக்காளர்களை தடுக்க நினைக்கும் போது திமுக ஏன் முட்டுக்கட்டை போடுகிறது என்றும் அண்ணாமலை மற்றொரு கேள்வியையும் முன் வைத்தார்.