Connect with us

உங்களுக்குதான் விலையில்லாதது, அரசு விலைகொடுத்துதான் வாங்குகிறது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Law Minister Raghupathi

செய்திகள்

உங்களுக்குதான் விலையில்லாதது, அரசு விலைகொடுத்துதான் வாங்குகிறது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இன்று புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் உள்ளிட்ட 213 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் கொடுக்கும் விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.‌ இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்:

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புரட்சியையும் எழுச்சியையும் உருவாக்கி கொண்டுள்ள ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்றை ஆண்டு காலத்தில் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு அரசு பள்ளிகளை தேடி நாடி மாணவ மாணவிகள் வரக்கூடிய அளவில் அவர்களின் கவனத்திற்கு சென்ற அரசாக தமிழக அரசு உள்ளது. இந்த ஆட்சியில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வித் துறையில் அனைத்து படிப்புகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக உருவாக்கிக் கொண்டு உள்ளவர் தான் தமிழக முதலமைச்சர்.

தனியார் பள்ளிகளில் படிப்பதை விட அரசு பள்ளிகளில் படிப்பதாலேயே பெற்றோருக்கான சுமையையும் குறைக்கிறீர்கள் எந்தவித செலவையும் இல்லாத வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கி தந்து வருகின்றனர்.

மாணவர்கள் அவர்களது திறமையை உணர்ந்து செயல்பட வேண்டும் ஆசிரியர்களும் மாணவர்களின் திறமையை உணர்ந்து அவர்களை திறமைசாலியாக ஆக்கக்கூடிய பணியை செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு தான் இது விலைஇல்லா மிதிவண்டி அரசை பொருத்தவரை அது விலை கொடுத்து வாங்கும் மிதிவண்டி என்பதை மறந்து விடக்கூடாது. இடைநிற்றல் மாணவர்களை தேடி பிடித்துக் கண்டறிந்து அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்ததன் அடிப்படையில் இடைநிற்றலே இல்லாத மாணவர்களை உருவாக்க கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது.

அரசு அனைத்து விஷயத்திலும் உறுதுணையாக இருப்பதைப் போல மாணவர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க சிறந்த மாணவர்களாக உருவாகி வரவேண்டும். அதுதான் அரசுக்கு மாணவர்கள் செய்கின்ற கைமாறு‌ என்று தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top