Connect with us

பல் ஊடக செய்தியாளர் பணிக்கு இந்தி எதற்கு?: மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கேள்வி

media 1

செய்திகள்

பல் ஊடக செய்தியாளர் பணிக்கு இந்தி எதற்கு?: மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கேள்வி

பல் ஊடக செய்தியாளர் பணிக்கு இந்தி எதற்கு?: மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கேள்வி

தமிழகத்தில் பல இடங்களில் இந்தித்திணிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பல் ஊடக செய்தியாளர் பணிக்கு இந்திய எதற்கு என்று எம்பி வெங்கடேசன் கேள்வி கேட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் பணியாற்ற பல்லூடக செய்தியாளர் பதவிக்கு இந்தி எதற்கு என்று வெங்கடேசன் எம்பி கேள்வி கேட்டுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் மூலம் கேள்வி கேட்டுள்ளார். பிரசார் பாரதி சார்பில் பல செய்தியாளர் பதவிக்கான அறிக்கையை ஜனவரி 16ம் தேதியில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் பல்லூடக செய்தியாளர் பணியிடத்துக்கு விரும்பப்படும் கூடுதல் தகுதிகளில் இந்தி அறிவும் கோரப்பட்டுள்ளது.

இந்தி அறிவுக்கு என்ன கூடுதல் மதிப்பெண், முன்னுரிமை என்ற விவரங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடிதத்தில் கூறியுள்ளார். பிரசார் பாரதியின் அறிக்கையில் இந்தி தேர்வு குறித்த விவரங்களும், இட ஒதுக்கீடு பற்றிய குறிப்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கும்,  பிரசார் பாரதி சிஇஓ சசி எஸ் வேம்பதிக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top