அபேசியா என்றால் என்ன? என்னென்ன பாதிப்புகள்? குணப்படுத்தக்கூடியதா?
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசிய நோய் பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அபேசியா நோய் அபேசியா அது குறித்த சில விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
அதன்படி அபேசியா பிறருடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் குறைபாடு என்று போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவித்துள்ளார்.
பேசுவது அல்லது பிறர் பேசுவதை புரிந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படும் என்றும் சுவாதி கிரண் கூறினார். அபேசியா பாதித்தவருக்கு எழுதும் திறன், எழுதப்பட்ட வார்த்தையை புரிந்துகொள்வது வாசிப்பது போன்றவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
பெரும்பாலான சமயங்களில் பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறினார்.அபேசியா குணப்படுத்தக்கூடியது என்றும் தொடர் சிகிச்சையால் பேச்சுத்திறனை மீட்டெடுக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அபேசியா தொடர்பான பரிசோதனைகள் ஆரம்ப நிலையில் உள்ளது என்றும் சுவாதி கிரண் கூறினார். தற்போதைய நிலையில் பேச்சை மீட்டெடுக்கும் சிகிச்சையே பொதுவான சிகிச்சையாக பின்பற்றப்படுகிறது என்று கூறினார்.
