நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி?

தற்போது நம் தமிழகத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அந்த படி அவை நவம்பர் 1-ஆம் தேதி முதல் என்னென்ன பணிகளுக்கு அனுமதி என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.மெரினா

அந்த படி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

மழலையர் பள்ளி தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. அதோடு மட்டுமில்லாமல் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது .

அங்கு பணிபுரியும் காப்பாளர்,சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும்  தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

திருமணம் மேலும் தமிழகத்தில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment