இலங்கையிலே இந்திய ராணுவமா? எல்லாம் சுத்தப் பொய்!! வதந்திகள், அடிப்படைத் தன்மையற்றது!!!
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தில் சிக்கி தவித்து உள்ளது. இதனால் இலங்கைக்கு உலக நாடுகள் பலவும் உதவி கொண்டு வருகிறது. இருப்பினும் உலக நாடுகளிடம் இலங்கை அதிக அளவு கடன் பெற்றதாக ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இலங்கையின் அண்டை நாடான நம் இந்திய அரசு பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் இலங்கையில் திடீரென்று இந்திய ராணுவம் செல்வதாக வதந்திகள் பரப்பப்பட்டு இதுகுறித்து இலங்கை இந்திய தூதர் பேட்டி எடுத்துள்ளார்.
அதன்படி இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லவிருப்பதாக கூறப்படுவது அனைத்தும் வதந்தி மற்றும் அடிப்படைத் தன்மை அற்றது என்றும் அவர் கூறினார். கொரோனா காலத்தில் இலங்கைக்கு உதவியது நினைவுகூர்ந்து இந்திய தூதர் இவ்வாறு கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மனித நேய உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார். கடல் வழியில் இலங்கையின் நெருங்கிய நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.
இலங்கையுடனான உறவை இந்திய வெளியுறவுக் கொள்கையின் படி அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது இலங்கையில் வேண்டுதல்கள் நடைபெற்றன என்றும் அவர் கூறினார். இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போது மருந்துகள் இன்றைய பொருட்கள் வழங்கி இந்தியா உதவியது என்றும் அவர் கூறினார்.
