இன்று டெல்லி மாநகராட்சி தேர்தல்! நாளை மக்களவை தேர்தல்..!! ஒத்திவைத்தால் என்னவாகும்?

டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதற்கு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் நாளை மக்களவைத் தேர்தலை ஒத்தி வைத்தால் என்னாகும் என்று கேள்வி கேட்டுள்ளார். டெல்லி மாநகராட்சித் தேர்தல் போல நாளை மக்களவை தேர்தலை நிறுத்தினால் என்ன ஆகும் என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு பதில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரப்போவதாக நாளை ஒன்றிய அரசு கூறக் கூடும் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளதால் மக்களவைத் தேர்தலை தள்ளி வையுங்கள் என்று பாஜக அரசு கூறக் கூடும் என்றும் அவர் கூறினார்.

ஒன்றிய பாஜக அரசு கோரினால் மக்களவை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு விடுமா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இரு மாநிலங்களை ஒன்றாக இணைக்க உள்ளதாக ஒன்றிய அரசு கூறினால் மாநில தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்றும் கெஜ்ரிவால் கேள்வி கேட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment