Connect with us

ஒரு CEO-வே தவறு செய்தால் எப்படி? உடனடியாக சஸ்பெண்ட்-பள்ளிக்கல்வித்துறை!

Arulselvan 16449134453x2 1

தமிழகம்

ஒரு CEO-வே தவறு செய்தால் எப்படி? உடனடியாக சஸ்பெண்ட்-பள்ளிக்கல்வித்துறை!

ஒரு CEO-வே தவறு செய்தால் எப்படி? உடனடியாக சஸ்பெண்ட்-பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அச்சம் நிலவுகிறது, ஏனென்றால் தமிழகத்தில் அடுத்தடுத்து திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது அவர்களின் பொதுத்தேர்வில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கலக்கம் உருவாகி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் ஒன்றொன்றாக கசிந்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக நடப்பாண்டிற்கான திருப்புதல் வினாத்தாள்கள் குறிப்பிடத்தக்கது.

இதனால் பள்ளி கல்வித்துறை நேற்றைய தினம் திருப்புதல் வினாத்தாள்களை வெளியிட்ட பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்தது பள்ளி கல்வித்துறை.

தேர்வுத் துறையின் ரகசியங்களை காப்பாற்றுவதில் இருந்து தவறியதால் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் சனிக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top