என்னது ஹீல்ஸ் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டதா? ஒரு சுவாரசிய தகவல்….

பெண்கள் எப்போதும் அவங்கள அழகுப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவாங்க. அந்த வகையில் அழகான டிரஸ், நகைகள் என விதவிதமாக அணிந்து அவர்களை அழகுப்படுத்தி பார்ப்பார்கள். அவ்வளவு ஏன்ங்க கால்ல போடுற செருப்ப கூட பார்த்து பார்த்து தான் செலக்ட் பண்ணுவாங்க. அந்த வரிசையில் எல்லா பொண்ணுங்களுக்கும் பேவரைட்டா இருக்கறது ஹை ஹீல்ஸ் தாங்க.

ஏதாவது நிகழ்ச்சி அல்லது பார்ட்டிகளுக்கு செல்லும்போது இதுபோன்ற ஹை ஹீல்ஸ் அணிவதால் தங்களை சற்று அழகாக காட்டவதாக பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் ஹை ஹீல்ஸ் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆமாங்க முதன் முதலில் குதிகால் உயர காலணிகள் ஆண்களுக்காக தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்கள் போர் மற்றும் குதிரை சவாரி செய்யும் போது இந்த வகை காலணிகளை பயன்படுத்தினார்கள். மேலும் குதிரை சவாரியின் ஹை ஹீல்ஸ் பிடியை வலுப்படுத்த பயன்படுகிறது என்பதால் ஆண்கள் இவற்றை பயன்படுத்தினார்கள்.

10 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹை ஹீல்ஸை முதல் முறையாக பாரசீக இராச்சியத்தில் ஆண்கள் அணியத் தொடங்கினர். பின்னர் 1599 ஆம் ஆண்டில், பாரசீக மன்னர் ஷா அப்பாஸ் தனது தூதரை ஐரோப்பாவிற்கு அனுப்பியபோது, ​​அவருடன் உயர் ஹீல் காலணிகள் ஐரோப்பாவை அடைந்தன.

அதனை தொடர்ந்து ஹை ஹீல் ஷூக்களை பயன்படுத்துவது உலகம் முழுவதும் அதிகரித்தது. படிப்படியாக, பல நாடுகளில் ஹை ஹீல்ஸ் காலணிகள் பயன்படுத்தத் தொடங்கி, அதை அணிவது பிரபுக்கள் மற்றும் மன்னர்களின் அம்சமாகவே மாறி விட்டது. ஆனால் அது சில காலம் மட்டுமே நீடித்தது.

1740 ஆம் ஆண்டு முதல் முறையாக பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியத் தொடங்கினார்கள். அன்றில் இருந்தே பெண்கள் ஹை ஹீல்ஸை முழுமையாக ஆக்கிரமித்தனர். அடுத்த 50 ஆண்டுகளில், இது ஆண்கள் அல்ல பெண்கள் பயன்படுத்தும் காலணிகள் என்ற நிலையை எட்டி விட்டது. பின்னர் பெண்கள் அவர்களுக்கு பிடித்தவாறு பல மாற்றங்களை செய்து தற்போது வரை அணிந்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment