என்ன சொல்றீங்க விமானத்தில் வந்த 125 பேருக்கு கொரோனாவா? நாங்க தான் விமான இயக்கவே இல்லையே!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் தக்க பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

air india

ஆயினும் வெளிநாடுகளில் பயணிகள் பெரும்பாலானோருக்கு கொரோனா  மற்றும் ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்படுகிறது, இத்தாலி நாட்டிலுள்ள ரோம் பகுதியிலிருந்து பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை விமான நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது பலருக்கும் குழப்பத்தை உருவாகியுள்ளது.

அதன்படி இத்தாலி நாட்டின் தலைநகரம் ரோம் நகரிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த 125 பேருக்கு கொரோனா பரிசோதனையின் முடிவுவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இத்தாலியில் ரோம் நகரின் ஏர் இந்தியா நிறுவனம் இதனை மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் இத்தாலி, ரோம் நகரில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என்றும் ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment