இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ஷிவானி, பாலாஜியை ஒதுக்கிய முதல் புரமோ வீடியோ குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரோமோவில் ஷிவானி, பாலாஜியிடம் பேசினாலும் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பேசிய காட்சிகள் உள்ளன
ஷிவானி, சனம்ஷெட்டி, ரேகா மற்றும் வேல்முருகன் ஆகிய நால்வர் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு பாலாஜி வந்தார். அவர் ஷிவானியிடம் பேசுவதற்காகவே வந்த நிலையில் ஒரு பார்மாலிட்டிகாக ’எப்படி இருக்கிறாய்’ என்று ஷிவானி கேட்க அதற்கு ’நான் நன்றாக இருக்கிறேன்’ என்று பாலாஜி பதில் கூறுகிறார்
நான் வந்ததில் இருந்து பார்க்கின்றேன், கொஞ்சம் டல் ஆக இருக்கிறாய் என்று பாலாஜியிடம் கேட்ட ஷிவானி, அவருடைய பதிலைக் கூட எதிர்பாராமல் திரும்பி நடையை கட்டியது பாலாஜியை அவமதித்தது போலவே இருந்தது
பிக்பாஸ் வீட்டில் இருந்த 3 மாதங்களும் பாலாஜி உடன் நெருக்கமாக இருந்த ஷிவானி, திடீரென அவரை விட்டு விலகுவது ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது
#Day103 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3RRDzc56ER
— Vijay Television (@vijaytelevision) January 15, 2021