OPS, EPS செய்தது என்ன? சசிகலா வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக பொது செயலாளர் நான்தான் என்று கூறி சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் 2017- ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல் எடப்படி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி சசிகலா, டி.டி. தினகரனை கட்சியில் இருந்து நீக்கினர். இதனிடையே இந்த தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
அதே போன்று பொது செயலாளராக நியமிக்ககோரி சசிகலா கூறுவது வாய்ப்பு இல்லை என்றும் கட்சியின் சின்னமும் தங்களிடம் இருப்பதாகவும் இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்ததாக பன்னீர்செல்வம், பழனிச்சாமி அவர்கள் முறையிட்டனர்.
தற்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமை நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
